SSC JE தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

0
SSC JE தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
SSC JE தேர்வு விடைக்குறிப்பு 2023 - வெளியீடு!
SSC JE தேர்வு விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் அளவு சர்வேயிங் & காண்ட்ராக்ட்) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSC JE தேர்வு தேதி:

ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் அளவு சர்வேயிங் & காண்ட்ராக்ட்) 2023 இன் Tier-I ஆட்சேர்ப்புக்கான கணினி அடிப்படையிலான தேர்வு 09.10.2023 முதல் 11.10.2023 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடைபெற்றது. விண்ணப்பதாரர்களுக்கான பதில் தாள்கள் மற்றும் தற்காலிக விடைகள் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

TNPSC பயிற்சி மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – கைநிறைய சம்பளம்.. உடனே பாருங்க!!!

SSC JE Answer Key 2023:

விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து தங்களின் விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது வெளியான விடைக்குறிப்பில் ஏதேனும் பிழைகள் இருப்பின் 15.10.2023 (மாலை 5.00 மணி) வரை தெரிவிக்கலாம். ஒரு கேள்வி/பதில் சவாலுக்கு ரூ.100/- செலுத்தி ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். 15.10.2023 அன்று மாலை 5.00 மணிக்குப் பிறகு பெறப்படும் பிரதிநிதித்துவங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download SSC JE Answer Key 2023 Press Notice
Download SSC JE Tier 1 Answer Key
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!