SSC GD Constable தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

0
  SSC GD Constable தேர்வு நுழைவுச் சீட்டு வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது General Duty Constable பணிக்கென 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள எழுத்து தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

SSC GD Constable நுழைவுச் சீட்டு:

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் CAPFs, NIA, SSF, Rifleman (GD) ஆகியவற்றில் காலியாக உள்ள General Duty Constable பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தமாக 26,146 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான SSC GD Constable எழுத்து தேர்வானது வருகின்ற பிப்ரவரி மாதம் 20ம் தேதி முதல் துவங்கப்பட்டு மார்ச் மாதம் 07ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Air India Express நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

இத்தேர்வுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டை SSC தேர்வாணையம் ஆனது 11.02.2024 அன்று வெளியிட்டுள்ளது. இதுவரை North Eastern (NER), Central Region (CR), Western Region (WR), North Eastern Region (NER), Madhya Pradesh Region (MPR) ஆகிய ஐந்து பிரிவுகளுக்கான நுழைவுச்சீட்டு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://ssc.nic.in/ என்ற இணைப்பின் மூலம் எளிமையாக பெறலாம். மேலும் இந்த தேர்வானது கணினி வழித்தேர்வு முறையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த தேர்வுக்கு தங்களது தயார் படுத்திக் கொண்டு இருக்கும் முழு வேகத்துடன் தயாராகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!