SSC GD Constable 2024 மறு தேர்வு தேதி வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
SSC GD Constable 2024 மறு தேர்வு தேதி வெளியீடு - முழு விவரங்கள் இதோ!

அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024ம் ஆண்டுக்கான SSC GD மறு எழுத்து தேர்வு நடைபெறவுள்ள தேதியை தற்போது அறிவித்துள்ளது.

தேர்வு தேதி வெளியீடு:

CAPFs, NIA, SSF, Rifleman (GD) ஆகியவற்றில் General Duty Constable பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 26,146 காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 2023 நவம்பர் 24ம் தேதி SSC தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெறப்பட்டது. பிறகு SSC GD Constable எழுத்து தேர்வானது கணினி வழித் தேர்வு முறையில் 2024 பிப்ரவரி 20ம் தேதி முதல் 2024 மார்ச் 07ம் தேதி வரை நடைபெற்றது.

HAL நிறுவனத்தில் ரூ.25,910/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

இவ்வாறு நடைபெற்ற எழுத்து தேர்வின் போது ஒரு சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாக அத்தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வானது ரத்து செய்யப்பட்டது. மேலும் எழுத்து தேர்வு ரத்து செய்யப்பட நபர்களுக்கு மறு தேர்வு விரைவில் நடைபெறும் எனவும் SSC தேர்வாணையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் SSC GD Constable 2024 மறு எழுத்து தேர்வானது வருகின்ற மார்ச் 30ம் தேதி நடத்தப்பட உள்ளதாக SSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வு நடைபெறவுள்ள மையங்களின் பட்டியலானது https://ssc.gov.in/ என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Download SSC GD Constable 2024 Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!