
SSC மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு 2025 – 7565 Constable பணியிடங்கள் | மாத சம்பளம் ₹21,700 – ₹69,100
மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையமான SSC (Staff Selection Commission) நிறுவனம் 2025 ஆண்டிற்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 7565 Constable காலியிடங்கள் இந்தியா முழுவதும் நிரப்பப்படவுள்ளன. அரசு துறையில் பணியாற்ற விரும்பும் 12ஆம் வகுப்பு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு ஆகும். விண்ணப்பிக்கும் செயல்முறை முழுவதும் ஆன்லைனில் நடைபெறும். விண்ணப்பங்கள் 22 செப்டம்பர் 2025 முதல் 21 அக்டோபர் 2025 வரை ஏற்கப்படும். தேர்வானவர்கள் மாதம் ₹21,700 முதல் ₹69,100 வரை சம்பளம் பெறுவார்கள்.
காலியிடங்கள்
| பதவி பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| காவலர் (Constable) | 7565 |
| மொத்தம் | 7565 |
கல்வித் தகுதி
-
விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
-
குறைந்தபட்சம்: 18 வயது
-
அதிகபட்சம்: 25 வயது
சம்பள விவரம்
-
Constable – ₹21,700 முதல் ₹69,100 வரை மாத சம்பளம்
தேர்வு செய்யும் முறை
-
கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
-
உடற்தகுதி தேர்வு (Physical Test)
-
மருத்துவ பரிசோதனை (Medical Test)
விண்ணப்பக் கட்டணம்
| பிரிவு | கட்டணம் |
|---|---|
| பொதுப்பிரிவு / OBC | ₹100 |
| SC / ST | கட்டணம் இல்லை |
விண்ணப்பிக்கும் முறை
-
அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் – ssc.gov.in
-
“Constable Recruitment 2025” பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
-
புதிய பதிவு செய்து, தேவையான விவரங்களை பூர்த்தி செய்யவும்.
-
புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
-
விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
-
விண்ணப்பத்தை சமர்ப்பித்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

























