நாடாளுமன்றம் கலைப்பு ..!! மீண்டும் நவம்பர்.14ல் தேர்தல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

0
நாடாளுமன்றம் கலைப்பு ..!! மீண்டும் நவம்பர்.14ல் தேர்தல்.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

இலங்கையின் புதிய அதிபராக நேற்று முன்தினம் அனுர குமார திசநாயக்க பதவியேற்றார். இதை தொடர்ந்து, பிரதமராக இருந்த தினேஷ் குணவர்த்தனே ராஜினாமா செய்தார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெண் தலைவரான ஹரிணி அமரசூரியாவை அதிபர் அனுர குமார திசநாயக்க நியமதித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு?? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று ( செப்டம்பர் 24) இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அனுர குமார திசநாயக்க உத்தரவிட்டார். இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அதே மாதம் 21ம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், முந்தைய ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லாத வகையில், கொழும்பு, யாழ்ப்பாணம் விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!