தீபாவளியை ஒட்டி இன்றிரவு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. முழு விவரம் உள்ளே!!

0
தீபாவளியை ஒட்டி இன்றிரவு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. முழு விவரம் உள்ளே!!

நாளை (அக்டோபர் 31) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அக்டோபர் 29ஆம் தேதி ஆன செவ்வாய் கிழமை (நேற்று ) முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதற்காக தமிழக அரசு சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான முன்பதிவுகள் மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்து நடந்து வந்தது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக முழுக்க முன்பதிவு இல்லா 3 சிறப்பு ரயில்கள் இன்று இரவு இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, எழும்பூரில் இருந்து (06155) இரவு 9.10 மணிக்கு விழுப்புரம், சிதம்பரம் வழியே திருச்சிக்கும், தாம்பரத்தில் இருந்து (06157) இரவு 12.30க்கு விழுப்புரம், அரியலூர் வழியே திருச்சிக்கும், சென்ட்ரலில் இருந்து (06159) இரவு 10.10க்கு அரக்கோணம், திருப்பூர் வழியே கோவை போத்தனூருக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

JOIN WHATSAPP EXAMSDAILY TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!