தெற்கு ரயில்வே தேர்விற்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு…தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி..!!

0
?????? ??????? ?????????? ?????????????? ?????? ????? ?????????...????? ?????????? ?????????..!!
தெற்கு ரயில்வே தேர்விற்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு...தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி..!!

தெற்கு ரயில்வே தேர்விற்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு…தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி..!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமானது ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை ஆண்டுதோறும் நிரப்பி வருகிறது. அந்தவகையில், தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் பதவிக்கு மொத்தம் 493 காலிப்பணியிடங்களை   நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இதற்கான முதற்கட்ட எழுத்து தேர்வில் தமிழகத்தில் மட்டும் 6,315 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…7% டிஏ உயர்வு என அதிரடி தகவல்

இந்நிலையில், இந்த தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் பதவிக்கான இரண்டாம் கட்டத் தேர்வு வருகின்ற மார்ச் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு, தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் 90% பேருக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், இவர்கள் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், பயண அலைச்சலை ஏற்படுத்தும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்குமாறு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்திற்கு வலியுறுத்தியுள்ளனர். மேலும், தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு இந்த பதவிக்கான  முதற்கட்டத் எழுத்து தேர்வின் போது, தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!