
வீட்டில் இருந்தபடியே UPSC தேர்விற்கு தயாராவது எப்படி..?? இதை மட்டும் பாலோவ் பண்ண போதும் வேலை கன்பார்ம்..!!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) என்பது இந்தியாவில் உள்ள ஒரு அரசு தேர்வாணையமாகும். இதன் மூலம் IAS, IPS உள்ளிட்ட 24 குடிமை பணிகளுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்ற அனைவரும் எழுதலாம். இந்த UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் Preliminary Exam, Main Exam மற்றும் நேர்காணல் என 3 நிலைகள் உள்ளது. இந்நிலையில் சரியான திட்டமிடலுடன் வீட்டில் இருந்தபடியே எப்படி UPSC தேர்வுக்கு தயாராவது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
TNPSC Group 4 தமிழ் தகுதித்தேர்வு., படிக்காமலே pass ஆகலாம்., இந்த ஒரு வீடியோ போதும்.,
அதாவது முதலில், “தேர்வுக்கு குறைந்தது 6 மாதத்திற்கு முன்பு படிக்க தொடங்க வேண்டும். மேலும், ஒரே நாளில் பல்வேறு பாடப்பகுதிகளை படித்து முடிப்பதை விட ஒவ்வொரு நாளும் குறைந்தது 8 மணி நேரம் படித்தால் நிச்சயமாக TNPSC தேர்வை எதிர்கொள்ளலாம். இதற்கு முதலாவதாக தினசரி காலை முந்தைய நாள் நீங்கள் படித்த தலைப்புகளை மதிப்பாய்வு செய்யவும். பின்னர் என்னென்ன பாடத்திட்டத்தை எப்போது படிக்க வேண்டும் என்பதை தெளிவாக அட்டவணை போட்டு அதன்படி பின்பற்ற வேண்டும். இதனிடையே செய்தித்தாள் வாசிப்பதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ளவும். இதை தொடர்ந்து, இன்று நீங்கள் படித்து முடிக்க வேண்டிய தலைப்புகளில் முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்துங்கள். மேலும், முந்தைய ஆண்டு வினாத்தாளில் உள்ள கேள்விகள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இறுதியாக நேர்காணலில் உங்களுக்கு உதவும் பயிற்சிகளில் கவனம் செலுத்தும் படி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்”.


























