முதுநிலை நீட் தேர்விற்கு தயாராவது எப்படி..?? மாணவர்களுக்கு உதவும் டிப்ஸ்., முழு விவரம் இதோ!!
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, மத்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புபவர்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளநிலை மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் முதுநிலை மருத்துவம் படிக்க தகுதியுடையவர்கள்.
TNPSC Tamil Ilakkanam Kuril Nedil Study Materials – Free PDF Download
இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்விற்கான (NEET PG 2025) அறிவிப்பு கடந்த ஏப்ரல் 16ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 2025 முதுநிலை நீட் தேர்வு வரும் ஜூன் 15-ம் தேதி 2 ஷிபிட்ஸ்களில் கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. மேலும் இத்தேர்வின் முடிவுகள் ஜுலை 15-ம் தேதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் சரியான திட்டமிடலுடன் எப்படி நீட் முதுநிலை தேர்வுக்கு தயாராவது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
- நீட் தேர்வில் NCERT புத்தகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை நன்றாகப் படிப்பது அவசியம்.
- நீங்கள் தினமும், வாரம், மாதம் என இலக்குகளை நிர்ணயித்து படிக்க வேண்டும்.
- நீட் தேர்வுக்கான முழுப் பாடங்களையும் பிரித்து ஒரு காலக்கெடுவுக்குள் படிப்பதே சிறந்த முறையாகும்.
- பலவீனமான பகுதியை கண்டறிந்து, அதை முடிந்தவரை சரிசெய்யவது அவசியமாகும்.
- மாதிரி தேர்வுகளை எழுதி, முந்தைய ஆண்டு நீட் கேள்வித்தாள்களையும் பயிற்சி செய்ய வேண்டும்.
- பார்முலாஸ், கான்செப்ட் மற்றும் முக்கியமான கோட்பாடுகளை தினமும் நினைவு கூறுங்கள்.


























