SIDBI வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி எனப்படும் SIDBI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Communication Officer (ACO) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
SIDBI காலிப்பணியிடங்கள்:
Assistant Communication Officer (ACO) பணிக்கென ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate / PG diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIDBI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 என்றும் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு SIDBI -ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIDBI தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து corpcomm@sidbi.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























