மறுஅறிவிப்பு வரும் வரை இந்தஅனைத்து இடங்களும் மூடல்.. தமிழக அரசு அறிவிப்பு… பட்டியல் இதோ..

1
???????????? ????? ??? ??????????? ????????? ?????.. ????? ???? ?????????... ???????? ???..
மறுஅறிவிப்பு வரும் வரை இந்தஅனைத்து இடங்களும் மூடல்.. தமிழக அரசு அறிவிப்பு... பட்டியல் இதோ..

மறுஅறிவிப்பு வரும் வரை இந்தஅனைத்து இடங்களும் மூடல்.. தமிழக அரசு அறிவிப்பு… பட்டியல் இதோ..

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை “ஃபெஞ்சல்” புயலாக வலுப்பெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்  புயல் காற்று  வீசக்கூடும் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

 

சென்னையில் விமான சேவைகள் ரத்து.. பயணிகள் அவதி.. முழு விவரம் உள்ளே..

அதாவது, சென்னை மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கும் என்றும், பரங்கிமலை, கோயம்பேடு மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் இடங்களில் மழைநீர் தேங்க அதிக வாய்ப்புள்ளதால், அங்கு வாகனங்களை நிறுத்த வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும்,  சென்னை   விமான நிலைய  ஓடுபாதை முழுவதிலும் மழைநீர் தேங்கி கிடப்பதால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி கடற்கரை-சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, சென்னை மாநகராட்சிக்கு கீழ் இயங்கும் 871 பூங்காக்கள் மறு அறிவிப்பு வரும்வரை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்குகளை இன்று தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!