தனது குழந்தையின் பெயரை வெளியிட்ட ‘பகல் நிலவு’ சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

0
தனது குழந்தையின் பெயரை வெளியிட்ட 'பகல் நிலவு' சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!
தனது குழந்தையின் பெயரை வெளியிட்ட 'பகல் நிலவு' சீரியல் நடிகை - ரசிகர்கள் வாழ்த்து!
தனது குழந்தையின் பெயரை வெளியிட்ட ‘பகல் நிலவு’ சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்து பிரபலமானவர்கள் அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப். இந்த ஜோடிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், பெயர் வைத்து விட்டதாக தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப்:

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பிடித்துள்ளனர். அந்த வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019 மார்ச் வரை ஒளிபரப்பான ஹிட் சீரியல் தான் பகல் நிலவு. இந்த சீரியலில் நடித்தவர்கள் அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப். அவர்கள் அந்த சமயத்தில் நிஜ வாழ்க்கையில் காதலித்து வந்தனர். அதன் பின் திருமணம் செய்து கொண்டனர்.

இசைவாணியை இம்சை என்று கூறிய அபிஷேக் – விஜய் டிவி பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியீடு!

இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்தார். மேலும் அது குறித்த பல போட்டோஷூட்களை பதிவு செய்து விமர்சனங்களில் சிக்கியவர்களில் இவரும் ஒருவர். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்த அவர் தொடர்ந்து பல வீடியோக்களை யூடுப் சேனலில் வெளியிட்டு வந்தார். அவருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது கணவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்தார்.

திருமண நாளில் போட்டோஷூட் நடத்திய ‘விஜய் டிவி’ அறந்தாங்கி நிஷா – ரசிகர்கள் வாழ்த்து!

மேலும் தனது குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அவர் கர்ப்பமாக இருக்கும் போது அவர்கள் பெயரை இணைத்து பேபி அன்விரா என பதிவிடுவார். இந்நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்ததால் சையத் அர்ஹான் (SYED ARHAAN) என்று பெயர் சூட்டி இருப்பதாக சையது அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப் ஆகியோர் மகிழ்ச்சியுடன் தங்களது இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்து உள்ளார்கள். இதனை தொடர்ந்து குழந்தை அர்ஹான் நலமுடனும், வளமுடனும் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here