இசைவாணியை இம்சை என்று கூறிய அபிஷேக் – விஜய் டிவி பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியீடு!

0
இசைவாணியை இம்சை என்று கூறிய அபிஷேக் - விஜய் டிவி பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியீடு!
இசைவாணியை இம்சை என்று கூறிய அபிஷேக் - விஜய் டிவி பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியீடு!
இசைவாணியை இம்சை என்று கூறிய அபிஷேக் – விஜய் டிவி பிக் பாஸ் 5 ப்ரோமோ வெளியீடு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ 3 வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் அபிஷேக் அனைவருக்கும் பட்டப்பெயர் வைத்து விளையாடுகிறார்.

‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 சீசன்களாக மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக ‘பிக் பாஸ்’ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்று தான் கூற வேண்டும். தற்போது இந்த முறை பல போட்டியாளர்கள் புதிய முகங்களாக இருக்கின்றனர். ஒரு வாரம் எந்த ஒரு சண்டையும் நடக்காத நிலையில், நேற்று தலைவர் பதவிக்கு ஒரு சிலருக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது. இதனால் வீட்டில் சண்டைகள் ஆரம்பித்து உள்ளது. எனவே நிகழ்ச்சி தற்போது சூடு பிடித்துள்ளது.

திருமண நாளில் போட்டோஷூட் நடத்திய ‘விஜய் டிவி’ அறந்தாங்கி நிஷா – ரசிகர்கள் வாழ்த்து!

இன்றைய எபிசோடுக்கான இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகியது. அதில் முதல் ப்ரோமோவில் அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரின் குணத்தினை பற்றி பேசினார். ஒரு சிலர் இந்த வீட்டில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள் என்று கூறினார். அதற்கு இமான் அண்ணாச்சியும் ஆமாம் என்று கூறினார். பின்னர், அடுத்ததாக ஒரு ப்ரோமோ வெளியாகியது. அதில் பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் மூவரும் ஒரு புதிய அணியாக மாறியதாக பிரியங்கா கூறுகிறார். பின்னர், சிரித்து பேசுகின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை கலாய்க்கும் ஐஸ்வர்யா, கடுப்பான மூர்த்தி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

தற்போது லேட்டஸ்டாக ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அபிஷேக் அனைவருக்கும் பட்டப்பெயர் வைக்கிறார். இமான் அண்ணாச்சிக்கு ‘அனாமத்து அண்ணாச்சி’, ‘பாவு’ பவானி, ‘அசால்ட்டு’ அக்சரா, ‘தலைவி’ தாமரை என்றும் வைத்து விட்டு இசைவாணிக்கு ‘இம்சை’ இசை என்று வைத்து விட்டு சிரிக்கிறார். இதனை கேட்டு விட்டு அனைவரும் சிரிக்கின்றனர். அப்போது இசை கோபமடைவது போல செய்து விட்டு பின்னர் அபிஷேக்கை வம்பிழுக்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here