திருமண நாளில் போட்டோஷூட் நடத்திய ‘விஜய் டிவி’ அறந்தாங்கி நிஷா – ரசிகர்கள் வாழ்த்து!

0
திருமண நாளில் போட்டோஷூட் நடத்திய 'விஜய் டிவி' அறந்தாங்கி நிஷா - ரசிகர்கள் வாழ்த்து!
திருமண நாளில் போட்டோஷூட் நடத்திய 'விஜய் டிவி' அறந்தாங்கி நிஷா - ரசிகர்கள் வாழ்த்து!
திருமண நாளில் போட்டோஷூட் நடத்திய ‘விஜய் டிவி’ அறந்தாங்கி நிஷா – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி கலக்கப்போவது நிகழ்ச்சி மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அவர் சமீபத்தில் தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறந்தாங்கி நிஷா:

அறந்தாங்கி நிஷா, ஒரு நகைச்சுவையாளராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று இரண்டாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளார். பின் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னைத் தானே செதுக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டினார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை கலாய்க்கும் ஐஸ்வர்யா, கடுப்பான மூர்த்தி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

மேலும் அந்த நிகழ்ச்சியில் தனது குழந்தைக்கு நடந்த விபத்து பற்றி பேசியும், அதற்கு உதவி செய்த ஈரோடு மகேஷ் பற்றி பேசி பலர் மனதை கவர்ந்தார். அதன் பின் கருப்பு ரோஜா என்ற யூடுப் சேனலை நடத்தி வரும் அவர் அதில் பல காமெடி நிறைந்த வீடியோக்களை பதிவிட்டுள்ளார். மற்ற நடிகர்கள் போலவே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிஷாவும் போட்டோஷூட்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தனது மகளுடன் போட்டோஷூட் நடத்திய போட்டோக்கள் வைரலானது.

சன் டிவியில் பிரபல சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றம் – புதிய சீரியல் அறிமுகம் எதிரொலி!

அந்த வகையில் சமீபத்தில் அறந்தாங்கி நிஷாவின் திருமண நாளை குடும்பத்தினரும், நண்பர்களும் சேர்ந்து கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்களை நிஷா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் கணவரை கட்டி அணைத்து சாய்ந்தபடி போஸ் கொடுத்துள்ள நிஷா, கவிதையுடன் திருமண நாள் வாழ்த்தை சொல்லிவிட்டு அதன் கீழே ‘எனக்கு நானே சொல்லிக்கிறேன்’ என காமெடியாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here