விஜய் என்னை எதிர்த்தாலும் ஆதரிப்பேன்.. சீமான் முக்கிய கருத்து!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியுள்ளார். இக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு விஜய் தலைமையில் வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது மாநாட்டிற்கான பணிகள் விக்கிரவாண்டியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் குறித்து சீமான் நெகிழ்ச்சியாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘என் தம்பி விஜய்யின் கொடியில் யானை இருக்கக்கூடாதா? யானையை பகுஜன் சமாஜ் என்ன பட்டா போட்டா வைத்துள்ளது? அது என்ன பகுஜன் சமாஜ் யானையா? விஜய்யை எதிர்த்து விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள்’. ‘ஆயிரம் இருந்தாலும் விஜய் என் தம்பி’. ‘என்னை எதிர்த்து விஜய் அரசியல் செய்தாலும், அவரை ஆதரிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.


























