அக்.15 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு !

0
அக்.15 முதல் பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு !
அக்.15 முதல் பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு !

அக்.15 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு !

நாடு முழுவதும் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அன்று முதல் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் தற்போது வெளியிட்டு உள்ளது. அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

பள்ளிகள் திறப்பு !

கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு ஏற்றப்பட்டு அனைத்து பணிகளும் முடக்கம் அடைந்தது. பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் அன்லாக் செயல்பட தொடங்கி உள்ளது.

தொடர்ச்சியாக வெளிவரும் தளர்வுகளில் தற்போது தான் பள்ளிகள் திறப்பிற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி அன்று முதல் பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும் அந்தந்த மாநில அரசுகளே இது குறித்து ஆராய்ந்து முடிவுகளை எடுத்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கீழே வரிசையாக வழங்கியுள்ளோம்.

மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் :
 • பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் மட்டுமே பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவேண்டும்.
 • பாடம் கற்க ஆன்லைன் வகுப்புகளையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
 • பள்ளிகள் தங்களின் வகுப்பறைகள், கழிப்பறைகள், பிற அறைகள், வளாகம் மற்றும் உபகரணங்களை முறையாகக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
 • பள்ளிகளில் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
 • எல்லா நேரங்களிலும் ஆசிரியர்களும் மாணவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
 • என்சிஇஆர்டி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் கல்வி அட்டவணையைப் பின்பற்றி, முழுக் கல்வி ஆண்டுக்கும் விரிவான கல்வி அட்டவணையைப் பள்ளிகள் உருவாக்குவது அவசியம்.
 • அவசரகால உதவிக் குழு, பொதுப் பாதுகாப்புக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு உள்ளிட்ட செயல்பாட்டுக் குழுக்கள் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும்.
 • வீட்டுப் பள்ளியில் இருந்து முறையான பள்ளிப் படிப்புக்கு மாணவர்களை மென்மையான முறையில் மாற்றிக் கொண்டுவருவதைப் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.
 • அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிச் சொந்தமாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.
 • பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க, சூடாகச் சமைக்கப்பட்ட மதிய உணவு அல்லது அதற்கு ஈடான ஊக்கத் தொகையை வழங்க வேண்டும்.
 • பள்ளியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 • தனிமனித இடைவெளி, பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த பலகைகள், பேனர்களை வாய்ப்புள்ள இடங்களில் வைக்க வேண்டும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!