
மாணவர்களுக்கு குட் நியூஸ்…தொடர் மழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…!! ” மாவட்ட ஆட்சியர் உத்தரவு”..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. மேலும்,சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதால், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை வடக்கு மற்றும் கிழக்கு வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று(26.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும், தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் சிறப்பு வகுப்புகளை ரத்து செய்ய பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


























