அதிக வட்டியை அள்ளிக்கொடுக்கும் எஸ்பிஐ FD திட்டம் – முழு விவரங்களுடன்!

0

அதிக வட்டியை அள்ளிக்கொடுக்கும் எஸ்பிஐ FD திட்டம் – முழு விவரங்களுடன்!

தற்போதைய பொருளாதாரத்தின் அடிப்படையில் சேமிப்பு என்பது மிக்கியமாகியுள்ளது. இதனால் மக்கள்  பிக்சட் டெபாசிட்களில் பணத்தை சேமித்து வருகின்றனர். எதிர்காலதிற்காக முதலீடு செய்யும்  பணம் பாதுகாப்பாகவும் அதிக வட்டி தருவதாகவு இருக்க வேண்டும் என அனைவரும் பிக்சட் டெபாசிட்களை நாடுகின்றனர். நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

ரிசர்வ் வங்கி இந்த மாதம் ரெப்போ விகிதத்தை குறைத்தது தொடர்ந்து, அனைத்து வங்கிகளும் கடன் மற்றும் வைப்புத்தொகை வட்டி விகிதங்களை குறைக்க தொடங்கின. இதன் ஒரு பகுதியாக, எஸ்பிஐ தனது சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியையும் குறைத்தது. இருப்பினும், இந்தக் குறைப்புக்கு பிறகு, SBI-யின் ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டங்களில் சிறந்த வட்டி கிடைக்கிறது. இப்போது, எஸ்பிஐயின் ஒரு திட்டத்தில் வெறும் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.24,604 நிலையான வட்டி கிடைக்கும். SBI FD-களுக்கு 3.50% முதல் 7.55% வரை வட்டி வழங்குகிறது. சாதாரண மக்களுக்கான FD வட்டி விகிதத்தை 3.50%-7.25%ல் இருந்து 3.50%-7.05% ஆக SBI குறைத்துள்ளது.

Cognizant நிறுவனத்தில் Product Specialist காலிப்பணியிடங்கள் – ஜாக்பாட் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

SBI-யில் 3 ஆண்டு கால FD-யில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால், முதிர்வு நேரத்தில் ரூ.24,604 நிலையான வட்டி கிடைக்கும். நீங்கள் ஒரு சாதாரண குடிமகனாக இருந்தால் (60 வயதுக்கு குறைவாக), ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மொத்தம் ரூ.1,22,781 கிடைக்கும், இதில் ரூ.22,781 நிலையான வட்டி அடங்கும். நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்தால் (60 வயதுக்கு மேல்), இந்தத் திட்டத்தில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மொத்தம் ரூ.1,24,604 கிடைக்கும், இதில் ரூ.24,604 நிலையான வட்டி அடங்கும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!