
நிறுத்தி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல்.. உச்ச நீதிமன்றம் அளித்த சிறப்பு தீர்ப்பு.. கட்டுப்பட்ட ஆளுநர்..!!
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் மீது குறிபிட்ட காலத்தில் ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழக பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பத்து மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டத்துக்கு எதிரானது என்றும், மாநில அரசின் ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இனி குழந்தைகள் தனி வங்கிக் கணக்கு தொடங்கலாம்.. RBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!
மேலும், “தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்றும், இந்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, தனியார் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டிட உரிம திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாவிற்கும் ஆளுநர் இன்று (22-04-2025) ஒப்புதல் வழங்கியுள்ளார்.
























