SBI Clerk Main Exam 2024 தேதி அறிவிப்பு – விரைவில் நுழைவுச் சீட்டு வெளியீடு!

0
SBI Clerk Main Exam 2024 தேதி அறிவிப்பு - விரைவில் நுழைவுச் சீட்டு வெளியீடு!

2024ம் ஆண்டுக்கென நடத்தப்படவுள்ள SBI Clerk தேர்வின் இரண்டாம் கட்டமான Main Exam நடைபெறும் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

SBI Clerk Main Exam 2024:

SBI என்னும் பாரத ஸ்டேட் வங்கியானது 2023 – 2024ம் ஆண்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ள Clerk பதவிக்கான 8773 காலியிடங்கள் குறித்த அறிவிப்பை 16.11.2023 அன்று வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Preliminary Exam, Main Exam, Interview ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பணிக்கான SBI Clerk Preliminary Exam ஆனது கடந்த ஜனவரி மாதம் 05ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான முடிவுகள் நாளை (16.02.2024) வெளியிடப்படும் என SBI வங்கியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்வு முறையான SBI Clerk Main Exam வருகின்ற பிப்ரவரி மாதம் 25ம் தேதி முதல் மார்ச் மாதம் 4ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டானது நாளை Preliminary தேர்வு முடிவுடன் சேர்த்து வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை https://bank.sbi/hi/web/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!