உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு.. மாற்றத்தை கொண்டு வருவாரா??
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த டிஒய் சந்திரசூட்டின் பதவிக்காலம் நேற்றுடன் (நவம்பர் 10) முடிவடைந்தது. இதையடுத்து. உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை டிஒய் சந்திரசூட் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டது.
Today Gold Rate:மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு…!! ” நகை பிரியர்கள் மகிழ்ச்சி”..!!
அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று (நவம்பர் 11) பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, சஞ்சீவ் கண்ணாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் 51வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் வரும் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி வரை ஆகும் .



























