MLA & அமைச்சரின் ஊதியம் அதிரடி உயர்வு – சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!

0
MLA & அமைச்சரின் ஊதியம் அதிரடி உயர்வு - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!
MLA & அமைச்சரின் ஊதியம் அதிரடி உயர்வு - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!
MLA & அமைச்சரின் ஊதியம் அதிரடி உயர்வு – சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்!

மேற்கு வங்காளத்தில் எம்எல்ஏ மற்றும் அமைச்சர்களின் ஊதியத்தை உயர்த்தும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

ஊதிய உயர்வு:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாநில அரசுகளுக்கும் தனியாக சட்டங்கள் வகுத்து அதன் கீழ் ஊழியர்களுக்கான பண பலன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியம் மிக குறைந்த நிலையில் இருந்தது. இது குறித்த ஆலோசிக்கப்பட்டு ஊதியத்தை உயர்த்துவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் நாளை (டிச.01) முக்கிய இடங்களில் மின்தடை – விவரங்கள் வெளியீடு!

அதன்படி மேற்கு வங்காள மாநிலத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியத்தை மாதம் ரூ. 40000 ஆக உயர்த்தும் சட்ட மசோதா நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து பேசிய அம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்க சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்களின் ஊதியம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்று சுட்டிக்காட்டினார். இதனை கருத்தில் கொண்டு தற்போது ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர்களின் மாத ஊதியம் 51,000 ஆக அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!