வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.9000 உதவித்தொகை – புதிய அறிவிப்பு!!

0
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.9000 உதவித்தொகை – புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரூ.9000 பெற இருக்கின்றனர்.

வெள்ள நிவாரணம்:

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் மக்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில், மக்கள் ரூ. 6000 தொகையுடன் கூடுதலாக ரூ. 3000 சேர்த்து மொத்தமாக ரூ.9000 பெற இருக்கின்றனர். அதாவது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த மாதத்திற்கான தொகை ரூ.1000 முன்கூட்டியே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கியில் ‘இந்த’ பணியை இன்னும் முடிக்க வில்லையா? – கணக்கை முடக்கும் அபாயம்!

இதே போல, அடுத்த மாதமும் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை ஒட்டி மாதத்தின் முதல் வாரத்திலேயே ரூ.1000 வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பொங்கல் பரிசாக அரிசி மற்றும் வெள்ளத்திற்கு பதிலாக ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது. இதனால், அடுத்தடுத்து குடும்பத் தலைவிகளுக்கு கூடுதலாக ரூ. 3000 வழங்கப்பட இருக்கும் நிலையில் மொத்தமாக அரசின் சார்பில் ரூ.9000 பெற இருக்கின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!