வங்கியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் கணக்கு முடக்கமா? முழு விவரங்களுடன்!
இன்றைய கால கட்டத்தில் வங்கி என்பது முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் பணம் டெபாசிட் செய்யவும், தேவைப்படும் போது எடுக்கவும் பயன்படுகிறது. சேமிப்பு மற்றும் முதலீடு போன்றவையும் வங்கிகளில் செய்யப்படுகிறது. இந்திய முழுவதும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. சிறு பொருள் முதல் பெரிய பெரிய பொருட்கள் வரை எது வாங்கினாலும் QR கோடு மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
IT துறையில் வேலை வேண்டுமா? HCL Tech நிறுவனத்தில் உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
சமீபத்தில் வங்கி கணக்கில் 30 ஆயிரம் இருந்தால் கணக்கு மூடப்படும் என ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 30 ஆயிரத்துக்கு அதிகமாக வங்கி கணக்கில் பணம் இருந்தால் கணக்கு முடக்கப்படுமா? படாதா? என பல்வேறு குழப்பங்கள் எழுந்து வந்த நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதில் இது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்பதற்கு எந்த வரம்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























