RRB ALP தேர்வு முடிவுகள் 2025 – Cut Off மதிப்பெண்கள் குறித்த விவரங்களுடன்!
RRB ஆனது பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. சமீபத்தில் Assistant Loco Pilot பணிக்கென காலியாக உள்ள 18799 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இதற்கான முதற்கட்ட தேர்வும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 25.11.2024 முதல் 29.11.2024ம் தேதி வரை நடத்தப்பட்ட முதல் கட்ட தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி CBT 2 தேர்வு தேதி மற்றும் முதற்கட்ட தேர்வு முடிவு ஆகியவை இந்த மாத இறுதி வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்வர்கள் தங்களது cut-off மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியும்.
தமிழக அரசில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!
Download செய்யும் முறை:
தேர்வர்கள் RRB-ன் அதிகாரபூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் CEN No. 01/2024 ALP CBT 1 Result என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் வரும் PDF-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
பின் Roll Number-ஐ Search செய்து தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
அதன்பின் தேர்வு முடிவுகள், கட்- ஆஃப் விவரங்களை காணலாம்.
பின் Download என்பதை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்.


























