வக்பு திருத்த மசோதாவிற்கு எதிரான தமிழக முதல்வரின் தனி தீர்மானம் …!! சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றம் 

0
????? ??????? ??????????? ?????? ????? ?????????? ??? ????????? ...!! ??????????? ????? ???????? ??????????? 
வக்பு திருத்த மசோதாவிற்கு எதிரான தமிழக முதல்வரின் தனி தீர்மானம் ...!! சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றம் 

வக்பு திருத்த மசோதாவிற்கு எதிரான தமிழக முதல்வரின் தனி தீர்மானம் …!! சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றம் 

மத்திய அரசு சமீபத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இதற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டசபையில் வக்பு திருத்த மசோதாவை கைவிடகோரி தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்தார். அந்தவகையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தமிழ்நாட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் முகாம்கள்…!! அரசு வெளியிட்ட அதிரடி புள்ளி விவரம் இதோ

அப்போது, பேசிய அவர் “சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்த இஸ்லாமிய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், திருத்தப்பட்ட வக்பு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை இப்பேரவை  வலியுறுத்துகிறது” என்று கூறினார். இதனை தொடர்ந்து, இந்த தீர்மானத்தின் மீதான  விவாதம் நடைபெற்றது. மேலும், இந்த தீர்மானத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையை விட்டு வெளியேறியது. அதன்பின், எதிர்க்கட்சியான அ.தி.மு.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த வக்பு திருத்த மசோதாவிற்கு எதிரான தனி தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இதற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க உள்ளிட்ட கட்சியினருக்கு தமிழக முதல்வர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!