தாராபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.2லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
நிவாரணம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பழனியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பும் போது டேங்கர் லாரி மோதியதில் உயிரிழந்த சம்பவம் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கார்டே மற்றும் டேங்கர் லாரி மோதியதில் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம் – தினசரி அப்டேட்!
இந்நிலையில், கோரவிபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் தமிழக அரசின் சார்பில் வழங்கவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.