
நகைக் கடன் வாங்க போறீங்களா..?? அப்போ கண்டிப்பாக இதை பற்றி தெரிஞ்சுக்கோங்க.. ரிசர்வ் வங்கி அமல்படுத்தவுள்ள புதிய விதி மாற்றம்..
பெரும்பாலான இந்தியர்கள் இடையே சிறிதளவு நகை கட்டாயம் இருக்கும். அவற்றை எதிர்பாராத குடும்பச் செலவு, அவசர மருத்துவச் செலவு போன்ற உடனடி தேவைகளை நிவர்த்தி செய்ய வங்கியில் அடகு வைத்து கடன் வாங்கிச் செலவுகளை சமாளிப்பார்கள். மேலும், குறைந்த வட்டியில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கடன் பெறுவதில் வங்கியிடம் இருந்து நகைக் கடன் பெறுவது ஒரு சிறந்த தேர்வாகும். இந்நிலையில் ரிசர்வ் வங்கி தங்க நகைக் கடனுக்கான விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக வரவிருக்கும் 6 மருத்துவமனைகள்…!! சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்
அதாவது, “தற்போதுள்ள ரிசர்வ் வங்கியின் விதிமுறை படி, ஒவ்வொரு ஆண்டும் வங்கிகளில் நகை அடகு வைத்ததற்கான வட்டியை மட்டும் செலுத்தினால், அதே நாளில் நகையை மீட்டு மறு அடகு வைக்க முடியும். இதனால், ஆண்டுதோறும் வட்டி மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் இருந்தனர். இந்நிலையில், புதிய விதியில் வங்கிகளிடம் இருந்து நகைக் கடன் வாங்கியவர்கள் கால அவகாசம் முடிந்ததும் அசலுடன் வட்டியை சேர்த்து கொடுத்து நகையை மீட்ட பின்னர், மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு நகைக் கடன் பெறுவதில் கடும் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”.

























