ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளத்தில் வங்கி வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய ரிசர்வ் வங்கி ஆனது மருத்துவ ஆலோசகர் எனப்படும் Medical Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.08.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

மருத்துவ ஆலோசகர் எனப்படும் Medical Consultant (MC) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. விண்ணப்பதாரர் இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 (இரண்டு) ஆண்டுகள் தகுதி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

CSB வங்கியில் வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!

மருத்துவப் பயிற்சியாளராக ஏதேனும் ஒரு மருத்துவமனை அல்லது கிளினிக்கில் அலோபதி மருத்துவ முறையைப் பயிற்சி செய்திருக்க வேண்டும். ஒப்பந்த காலத்தில், ஒரு மணி நேரத்திற்கு ₹1000/- ஊதியம் வழங்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/APPLI04082023.pdf என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.08.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!