
உங்கள் பண பரிவர்த்தனைக்கு தினமும் ரூ.100 வழங்கும் வங்கிகள்.. ரிசர்வ் வங்கி விதித்த அதிரடி உத்தரவால் கலக்கத்தில் வங்கிகள்…
தற்போது உள்ள டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான மக்கள் மொபைல் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில் உங்கள் பரிவர்த்தனை தோல்வி அடைந்து, பின் டெபிட் செய்யப்பட்ட தொகை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் திரும்பி உங்கள் கணக்கிற்கு வரவில்லை என்றால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அபராதம் செலுத்த வங்கி கடமைப்பட்டுள்ளது என உங்களுக்கு தெரியுமா..?. மேலும், வங்கி தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, வாடிக்கையாளரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் சிக்கல் எழுந்தால், அபராதம் செலுத்த வங்கி பொறுப்பேற்க வேண்டும். இதை தொடர்ந்து, கார்டு பரிமாற்றங்களின் போது உங்கள் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டு பெறுநரை அடையவில்லை என்றால், உடனடியாக வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். அதை அடுத்த “2 நாட்களுக்குள்” வங்கி திரும்பி செலுத்த வேண்டும். இந்தக் காலத்திற்குள் பணம் வரவு வைக்கப்படாவிட்டால், ரிசர்வ் வங்கியின் “டர்ன் அரவுண்ட் டைம்” விதிப்படி தாமதமாகும் ஒவ்வொரு நாளும் வங்கிகள் தினசரி அபராதமாக “ரூ.100” வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த விதிகள் வாடிக்கையாளர் சிரமத்தை குறைத்து திறமையான பரிவர்த்தனை அமைப்புகளை மேம்படுத்த உதவும் என நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

























