Ranking Questions in Reasoning

0

தரவரிசை

இங்கே TNPSC தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.

Download Banking Awareness PDF

இந்த வகையான வினாக்களில் கொடுக்கப்பட்டவற்றின் ஒரு நபரோ அல்லது பொருளோ மற்ற சிலவற்றை அதனுடைய தரத்தை ஒப்பிட்டு பார்த்து இடமறிதல் வேண்டும். கொடுக்கப்பட்டவற்றை அதனுடைய ஏறுவரிசை அமைப்பிலோ அல்லது இறங்கு வரிசை அமைப்பிலோ எழுதி அவற்றின் தரத்தை கண்டறியப்பட வேண்டும். இது மிகவும் எளிதான ஒன்று ஆனால் சில நேரங்களில் சற்று கடினமான தொகுப்புகள் கொடுக்கப்படும். இருந்தாலும் அவற்றை சில விதிகளை வைத்து எளிதாக மாற்றிவிடலாம். சில நேரம் கொடுக்கப்படும் வினாவானது போதுமானதாக இல்லாமல் இருந்தாலும் அவற்றுக்குள்ளே விடைக்கான வினாவானது கொடுக்கப்பட்டிருக்கும். அதை நாம் கண்டறிந்து விடையளிக்கப்பட வேண்டும்.

சில நேரங்களில் ஒரு குழுவில் உள்ள நபரின் தரமானது அல்லது வகுப்பில் உள்ள நபரின் தரமானது மேலிருந்து கீழாகவோ அல்லது குழுவிலே எந்த தரம் என்பது தேவைப்படலாம். அச்சமயற்களில் நமக்கு அந்த குழுவில் அல்லது வகுப்பில் உள்ள நபர்களின் எண்ணிக்கை கொடுக்கப்படாவிட்டால் அதை நாம் கண்டறிய முடியாது. சில நேரங்களில் இந்த வினாவானது ஏதேனும் முடிவை வைத்து நபரின் தரத்தை கேட்கலாம்.

கீழே கொடுக்கபட்ட உதாரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

  1. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களில் சஞ்சீவ் மேலிருந்து 16வது இடம் மற்றும் கீழிருந்து 49வது இடம் எனில் அந்த வகுப்பறையில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

     A)66                B)65                C)64             D)கண்டறியப்பட முடியாது

  1. வகுப்பறையில் உள்ள 35 மாணவர்களில் சஞ்சீவ் தரமானது 7வது தரமாகும் மேலிருந்து. கோபாலின் தரமானது 4வது தரம் சஞ்சிவின் தரத்திலிருந்து எனில் கோபாலின் தரம் கீழிருந்து எத்தனை?

     A)25வது          B)26வது         C)28வது       D)24வது

  1. ஒரு வரிசையில் ராமாவின் இடதுபுற முடிவிலிருந்து 12 ராமுவின் இடம் வலதுபுற முடிவிலிருந்து 19 பின்னர் இவர்கள் இடம் ஒருவருக்கொருவர் மாற்றப்படும் போது ரமாவின் இடமானது இடப்புறத்திலிருந்து 21 எனில் எத்தனை மாவணர்கள் உள்ளனர்?

     A)52                B)40               C)39             D)கண்டறியப்பட முடியாது

  1. 62 மாணவியர்களில் நித்யாவின் தரமானது 18 ஆகும். எனில் அந்த வரிசை மாற்றி எழுதப்படும் போது அவள் பெற்ற புதிய தரம் எவ்வளவு?

     A)42                B)43               C)44             D)45

5. ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் வரிசையில் பிரபு இடப்புற முடிவிலிருந்து 9வது    இடமும் பத்மா வலப்புறத்திலிருந்து 12வது இடத்திலும் உள்ளனர். அதே வரிசையில்  ராம் இடப்புறத்திலிருந்து 12வது இடமும் ராதா வலப்புறத்திலிருந்து 9வது இடமும்  பெறுகின்றனர். எனில் ராதாவுக்கும் பிரபுவுக்கும் இடையே உள்ள மாணவர்கள் எத்தனை பேர்?

     A)18                B)21               C)24              D)கண்டறியப்பட முடியவில்லை

  1. ஒரு வகுப்பில் அஜித் தரமானது மேலிருந்து 11 மற்றும் கீழிருந்து 27 அதே வகுப்பறையில் அனுஜாவின் தரமானது 14 மேலிருந்து எனில் அனுஜாவின் தரம ; கீழிருந்து எத்தனை?

     A)23                B)30               C)24             D)29

  1. ஒரு வரிசையிலுள்ள மாணவர்களில் சந்தீப் இடமிருந்து 8வது தரம் மற்றும் சுமித் வலதுப்புறமிருந்து 11வது தரம். இப்போது சுமித் மூன்று இடம் தள்ளி மாற்றப்படும் போது அவனுடைய தரம் இடப்புறத்தில் இருந்து 13 ஆக மாறுகிறது. எனில் சந்தீப்பிற்கும் சுமித்திற்கும் இடையேயுள்ள மாணவர்கள் மாற்றப்படுவதற்கு முன் எத்தனை பேர்?

    A)7                   B)8                 C)6              D)கண்டறியப்பட முடியாது

  1. ஒரு வரிசையில் உள்ள மாணவர்கள் ‘X’ என்பவர் இடப்புறத்திலிருந்து 17வது இடமும் மற்றும் ‘Y’ என்பவர் வலப்புறத்திலிருந்து 10வது இடம் ‘X’ என்பவர் 5 இடம் இடப்புறமாக மாற்றப்பட்டால் இடப்புறத்திலிருந்து ‘Y’ என்பவருக்கு அடுத்த நபராக மாற்றப்படுகிறார் எனில் எத்தனை மாணவர்கள் அந்த வரிசையில் உள்ளனர்?

     A)32                B)33               C)31            D)கண்டறியப்பட முடியவில்லை

  1. ஒரு வகுப்பிலுள்ள சிறுமிகளில் லோனா இடப்புறமிருந்து 9வது இடம் மாற்று லூசியா வலப்புறமிருந்து 11 மேலும் இவர்கள் தங்கள் இடத்தை மாற்றி கொள்ளும் போது லூசியாவின் இடமானது வலப்புறத்திலிருந்து 17வது இடம் எனில் எத்தனை சிறுமிகள் அந்த வரிசையில் உள்ளனர்?

     A)27                B)26               C)25            D)24

  1. ஒரு சங்கீதாவின் தரமானது மேலிருந்து 13வது மற்றும் கீழிருந்து 26வது இடம் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை எத்தனை?

     A)38                B)44               C) 45           D) 50

இவற்றை தவிர்த்து வேறு சில தரம் காணுதல் காணப்படுகிறது. அவை உயரம் எடை மதிப்பெண் வயது மேலும் பல காணப்படுகிறது. இந்த மாதிரியான வினாக்களில் உயர்வு மற்றும் குறைவு கொண்டு கணக்கிடப்படுகிறது.

  1. ஒரு A என்பவர் E என்பவரை விட உயரமானவர் B என்பவர் D யைக் காட்டிலும் உயரமானவர் F என்பவர் Cஐக் காட்டிலும் உயரமானவர் D என்பவர் Aயைக் காட்டிலும் உயரமானவர் மற்றும் E என்பவர் Fஐக் காட்டிலும் உயரமானவர் எனில் இவர்களில் யார் உயரமானவர்?

     A)A                  B)E                C) F              D) B

  1. ஒரு ஆறு மாணவர்களில் நிதின் மகேஸை விட எடை அதிகமானவர் ஆனால் நந்துவை விட எடை குறைவானவர். கேதன் மகேஸை விட குறைவு ஆனால் ரமேஸை விட எடை குறைவானவர் அல்ல. நந்து அமித்தை விட எடை குறைவு எனில் இதில் எடை குறைவானவர் யார்?

     A)மகேஸ்        B)கேதன்      C)ரமேஸ்       D) கண்டறியப்பட முடியாது

விடைகள்:

1.C          2. A          3. C          4. D            5.D          6. C

7. A         8. A          9.C          10. A           11. D       12. C

Download PDF

 Download Static Gk Materials

To Follow  Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!