நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 15 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 15 2019

முக்கியமான நாட்கள்

மார்ச் 15 – உலக உறக்க தினம்

  • உலகளாவிய உறக்க சமூகத்தால் உருவாக்கிய இந்த உலக உறக்க தினம், உறக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஆராய்ச்சியாளர்கள், உடல்நல வல்லுநர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உறக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
  • அனைத்து வயதிலும் ஆரோக்கியமான உறக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கத்தில் ‘Healthy Sleep, Healthy Aging,’ என்ற முழக்கத்தை இணைத்துள்ளது.

தேசிய செய்திகள்

ஆந்திரப் பிரதேசம்

விஷ்ணு நிவாஸம்‘ ISO சான்றிதழை பெற்றுள்ளது

  • திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) ‘விஷ்ணு நிவாஸம்’ என்ற ஓய்வு விடுதி மற்றும் யாத்திரை விடுதி வளாகத்திற்கு சர்வதேச தரநிர்ணய அமைப்பு (ISO) சான்றிதழ் அளித்துள்ளது. இந்தச் சான்றிதழை பெறும் முதல் TTD விடுதி வளாகம் இதுவாகும்.

புது தில்லி

ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்

  • ஸ்பாட் பிக்சிங் வழக்கினால் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எஸ். ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அதன் கடும் தண்டனையை மறு ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டது.

மாநாடுகள்

புதுமை மற்றும் தொழில் முனைவோர் விழா

  • இந்தியாவின் குடியரசுத் தலைவர் ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், குஜராத்தின் காந்தநாகரில் (மார்ச் 15, 2019) புதுமை மற்றும் தொழில் முனைவோர் விழாவை தொடங்கி வைத்தார். அவர் 10வது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கும் தேசிய அடிமட்ட புதுமை விருதுகளை வழங்கினார்.

நியமனங்கள்

  • எம்.ஆர்.குமார் – இந்திய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின்(LIC) புதிய தலைவர்

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாஅமெரிக்கா இடையே இருதரப்பு ஒப்பந்தம்

  • இந்தியா-அமெரிக்கா இடையே இருநாட்டின் அறிக்கைகளை பரிமாற்றம் செய்துகொள்ள(CBC) இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

பாதுகாப்பு செய்திகள்

ஆஸ்திரேலியா இலங்கையுடன் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளத் திட்டம்

  • இந்திய-பசிபிக் 2019 இராணுவப்பயிற்சியின் ஒரு பகுதியாக இலங்கையுடன் மிகப்பெரிய இராணுவப் பயிற்சியை மேற்கொள்ள 1000 க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலிய கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகளை ஈடுபடுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு தகுதி

  • அசர்பெய்ஜானில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் 3வது இடம் பிடித்து ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பை ‘வால்ட்’ பிரிவு இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் தீபா கர்மாகர் தகுதிபெற்றார்.

அஜித் அகர்கர் மற்றும் பிற உறுப்பினர்கள் மும்பை தேர்வாளர் பதவியிலிருந்து விலகினர்

  • மூத்த தேர்வு குழுவினரின் தலைவிதியைப் பற்றி விவாதிக்கும் இடைக்கால குழு கூட்டத்திற்கு முன்னரே, மும்பை கிரிக்கெட் சங்க (MCA) தேர்வுக் குழுவின் நான்கு உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

PDF Download

பிப்ரவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!