குதர்க்கமாக பேசும் சரவணன், குழப்பத்தில் சந்தியா – ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!

0
குதர்க்கமாக பேசும் சரவணன், குழப்பத்தில் சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!
குதர்க்கமாக பேசும் சரவணன், குழப்பத்தில் சந்தியா - ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!
குதர்க்கமாக பேசும் சரவணன், குழப்பத்தில் சந்தியா – ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியாவிற்கு என்று அவரது அண்ணன் அமெரிக்காவில் இருந்து ட்ரெஸ் மற்றும் ஸ்வீட் அனுப்பி வைக்கிறார். சந்தியா பேசும் அனைத்திற்கும் சரவணன் குதர்க்கமாகவே பேசுகிறார். இதனால் சந்தியா குழப்பம் அடைகிறார்.

“ராஜா ராணி 2” சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி” தொடரில் இன்று சந்தியா மற்றும் சரவணன் இருவரும் வண்டியில் கூரியர் ஆஃபீஸிற்கு செல்லுகின்றனர். அப்போது சந்தியா பெண்களின் மனநிலை குறித்து பேசி கொண்டு வருகிறார். இவை அனைத்தையும் பொறுமையாக கேட்கும் சரவணன் சந்தியாவிற்கு எதிர்பதமாகவே பேசுகிறார். இதனால் சந்தியாவிற்கு என்னவோ போல் ஆகி விடுகிறது.

CBSE 10 & 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய இணையதளம் துவக்கம்!

பின்பு, சரவணன் ரோட்டில் செல்லும் ஒரு பாட்டிக்கு உதவுகிறார். சந்தியா சரவணனை நினைத்து பெருமை அடைகிறார். வண்டியில் செல்லும் போது ஒரு இடத்தில் குழி இருக்கிறது. அதனை அருகில் இருக்கும் மண்ணை கொண்டு சந்தியா அடைக்கிறார். பின், சந்தியா யாரும் விழுந்து விட கூடாது என்பதற்காக தான் இவ்வாறாக செய்தததாக சரவணனிடம் கூறுகிறார். பின், சந்தியா தடுக்கி விழுகும் போது சரவணன் வந்து அவரை பிடித்து கொள்ளுகிறார். பின், இருவரும் கூரியர் ஆபீஸ் சென்று சந்தியாவின் அண்ணன் அனுப்பிய பார்சலை வாங்கி கொள்கின்றனர்.

அதில் சந்தியாவிற்கு என்று டிரஸ் மற்றும் ஸ்வீட் ஆகியவை இருக்கின்றது. இதனால் சந்தியா மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். பின், சந்தியா இது குறித்து சரவணனிடம் தெரிவிக்கும் போது சரவணன் சந்தியாவின் திருமண விஷயத்தில் தான் அவரது அண்ணன் அவசரமாக முடிவெடுத்ததாகவும், இதிலும் அதே போல அவசரமாக முடிவு எடுத்துள்ளார் என்று சந்தியாவிடம் கூறுகிறார். அதே போல் விவாகரத்து பத்திரம் குறித்தும் அவர் கேட்கிறார். இதனால் சந்தியா குழப்பம் அடைந்து மிகுந்த வேதனையுடன் வீட்டிற்கு செல்லுகிறார்.

TN Job “FB  Group” Join Now

சரவணனின் தங்கை பார்வதியை பார்க்க என்று அவரது முன்னாள் காதலர் பாலமுருகன் வருகிறார். பார்வதி தவறான ஒருவரை தற்போது விரும்புவதாகவும், அதனை விட சொல்லியும் அவர் கூறுகிறார். இதனை கேட்டு பார்வதி கொந்தளிக்க ஆரம்பித்து விடுகிறார். அவரை நன்றாக திட்டி விட்டும் அனுப்புகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!