தமிழகத்தில் மார்ச் 18 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு…சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் மேற்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் வருகின்ற மார்ச் 16 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 2 முதல் 3 செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
























