அதிக சிக்ஸர்கள் விளாசி ரோகித் ஷர்மா சாதனை – முழு பட்டியல் இதோ!
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரோகித் ஷர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்து 2 பெரும் சாதனைகளை பெற்றுள்ளார்.
சாதனை:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவுடன் மோதி வெற்றியை பதிவு செய்தனர். இதன் பின்னர், நேற்று டெல்லியில் நடைபெற்ற லீப் போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியினரை வென்று இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 84 பந்துகளில் 131 ரன்கள் குவித்துள்ளார்.
8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்ற இந்தியா – ரசிகர்கள் குதூகலம்!
இதன் மூலமாக, கேப்டன் ரோஹித் சர்மா உலகில் அதிக சர்வதேச சிக்ஸர்கள் மற்றும் அதிக சிக்ஸர்களை விளாசிய இந்திய வீரர் என்கிற சாதனையை முறியடித்துள்ளார். இது போக, அதிக காலண்டர் ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட சர்வதேச சிக்ஸர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்கிற சாதனையையும் ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்நிலையில், 84 பந்துகளில் சதம் அடித்து இரண்டு சாதனைகளை முறியடித்துள்ள ரோஹித் சர்மாவை ரசிகர்களின் மத்தியில் கொண்டாடி வருகின்றனர்.