Tokyo Olympics 2020 – அரையிறுதியில் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி!
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தற்போது சீன வீராங்கனை டாய் பி சுங் -கிற்கு எதிராக நடந்த போட்டியில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த முறை டோக்கியோவில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்று வருகின்றது. இந்தியா வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தங்களது திறமைகளை காட்டி அசத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு – அரசு நடவடிக்கை!
அந்த வகையில் அங்கு நடைபெற்று வரும் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து நேற்று நடைபெற்ற போட்டியில் ஜப்பான் நாட்டின் யமகுச்சியை எதிர்கொண்டு தனது அபார விளையாட்டு திறனை காட்டி, அவரை வென்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறினார். இன்று சீன வீராங்கனையான டாய் பி சுங் -கிற்கு எதிராக விளையாடினார்.
TN Job “FB
Group” Join Now
இந்த போட்டியில் முதலில் நன்றாக விளையாடி வந்த சிந்து பின்பு டாய் பி சுங் -கிற்கு எதிராக முதல் சுற்றில் தோல்வியை தழுவினார். பின்னர், 18-21, 12-21 என்ற நேர் கேம்களின் கணக்கில் தோல்வியை தழுவி உள்ளார். இதனால் தங்க/வெள்ளி பதக்கம் கை நழுவி போயுள்ளது. இதன் பிறகு சிந்து வெண்கல பதக்கத்திற்காக சீன வீராங்கனையான ஹி பிஞ்சிகோவுடன் விளையாட உள்ளார். இவரது தோல்வி ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.