Tokyo Olympics: பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம் – இந்தியாவிற்கு அடுத்த பதக்கம்?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று (ஜூலை 30) நடைபெற்ற பெண்களுக்கான பேட்மிண்டன் கால் இறுதி போட்டியில், ஜப்பான் நாட்டை சேர்ந்த வீராங்கனை யமகுச்சியை தோற்கடித்து இந்தியாவை சேர்ந்த பி.வி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள்
ஜப்பானில் நடைபெற்று வரும் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு உள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்களது அபாரத் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை ஒருவருக்கு மட்டுமே ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அந்த வகையில் பெண்களுக்கான பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு, வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.
‘1,00,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு’ – Cognizant நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
இதை தொடர்ந்து பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 30) நடைபெற்ற பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் கால் இறுதியை கடந்து வெற்றிகரமாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் பி.வி சிந்து.
TN Job “FB
Group” Join Now
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் பிரிவில் தங்கம் வென்றும், 2019 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வேண்டும் சாதனை படைத்தவர் பி.வி சிந்து. தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இவர் பேட்மிண்டன் பெண்களுக்கான பிரிவில் ஜப்பான் நாட்டின் யமகுச்சியை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 21-13 செட் கணக்கில் யமகுச்சியை தோற்கடித்து இந்தியாவை சேர்ந்த பி.வி சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.