விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா மகனுடன் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா மகனுடன் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா மகனுடன் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா மகனுடன் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஹேமா, தற்போது தனது மகனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஹேமா. இவர் இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மருமகளாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே பாயும் புலி, ஆறாது சினம், சவரக் கத்தி, வீர எண், இவர் யாரென்று தெரிகிறதா ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்தனை திரைப்படங்களில் நடித்தும் ஹேமாவிற்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை.

ரசிகர்களை ஏமாற்றிய ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த் – அப்போ கல்யாணம் இல்லையா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக தான் பேரையும் புகழையும் பெற்றுள்ளார். சில மாதங்களுக்கு முன்பாகவே ஹேமாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாள் முழுக்க ஷூட்டிங்கில் இருந்துவிட்டு குழந்தைகளையும் கவனித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். அந்த சேனலில் ஷூட்டிங்கில் நடக்கும் நிகழ்வுகள், சுற்றுலா சென்றது, உணவு சாப்பிட்டது என அனைத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

தற்போது ஹேமாவின் மகன் சாத்விக் காலையில் இருந்து என்னவெல்லாம் குறும்பு செய்கிறார் என்பதை படம் பிடித்து யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்ன குழந்தைகளை சமாளித்து கொள்வது என்பது உண்மையில் சவாலான விஷயம் தான். பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளை அம்மா வீட்டில் விட்டு செல்வது வழக்கம். குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என அனைத்தையும் அம்மா தான் கவனித்து கொள்வார்கள். ஆனால் ஹேமா ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் குழந்தையை அவரே கவனித்து கொள்கிறார். சாத்விக் செய்யும் குறும்புகளை அனைவரும் ரசித்து பார்த்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!