ரசிகர்களை ஏமாற்றிய ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த் – அப்போ கல்யாணம் இல்லையா?

0
ரசிகர்களை ஏமாற்றிய 'பிக் பாஸ்' யாஷிகா ஆனந்த் - அப்போ கல்யாணம் இல்லையா?
ரசிகர்களை ஏமாற்றிய 'பிக் பாஸ்' யாஷிகா ஆனந்த் - அப்போ கல்யாணம் இல்லையா?
ரசிகர்களை ஏமாற்றிய ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த் – அப்போ கல்யாணம் இல்லையா?

பிக்பாஸ் பிரபலம் யாஷிகா திருமணம் குறித்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது எங்கள் வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார்கள், எனக்கு லவ் எல்லாம் செட் ஆகாது. எனவே இந்த திருமணத்தை செய்து கொள்ளப் போகிறேன் என கூறியுள்ளார். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிக அதிர்ச்சியில் உள்ளனர்.

யாஷிகாவிற்கு திருமணம்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர் தான் யாஷிகா ஆனந்த். 2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அதிக பிரபலம் அடைந்தார். இவரின் கவர்ச்சியான நடிப்பால் இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம். யாஷிகா ஆனந்த் 14 வயதிலேயே நடிக்கத் தொடங்கியவர், தமிழ் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திலும் நடித்திருந்தார். கடந்த வருடம் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் யாஷிகா. அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளானது.

குக் வித் கோமாளிகளுடன் லூட்டி அடிக்கும் தொகுப்பாளர் ரக்சன் – வைரல் வீடியோ!

இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா தோழி வள்ளி செட்டி பவானி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தோழியை இழந்த துக்கத்தில் இருந்து நீண்ட நாட்கள் வெளியே வராமலே இருந்தார். அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர ரசிகர்களும் யாஷிகாவிற்கு ஆறுதல் கூறினர். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு வந்து கொண்டிருக்கிறார். தற்போது, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா ஆனந்த் அவ்வப்போது ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். இந்நிலையில், அவருடைய திருமணம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் திருமணம் செய்து கொள்வதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் அம்மாவும் அப்பாவும் அதற்கு சம்மதித்துள்ளனர். இது செட்டில் ஆகும் நேரம். இருப்பினும், திரைப்படங்களில் இருந்து விலகப் போவதில்லை. எனக்கு சினிமா பிடிக்கும். எதுவாக இருந்தாலும் நான் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பேன். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். லவ் எல்லாம் செட் ஆகாது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். ஆனால் அவர் சில மணி நேரங்களுக்கு பிறகு மற்றொரு பதிவில், எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துகள். இன்னும் 10 ஆண்டுகளுக்கு திருமணம் செய்துகொள்வது குறித்த எண்ணமே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!