பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன், தம்பிகளுக்கிடையே ஏற்படும் பிளவு – ஜனார்த்தனன் சூழ்ச்சி! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன், தம்பிகளுக்கிடையே ஏற்படும் பிளவு - ஜனார்த்தனன் சூழ்ச்சி! ரசிகர்கள் அதிர்ச்சி!
பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன், தம்பிகளுக்கிடையே ஏற்படும் பிளவு – ஜனார்த்தனன் சூழ்ச்சி! ரசிகர்கள் அதிர்ச்சி!

அண்ணன் தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் மெகா ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒவ்வொரு நாளும் பல சுவாரஸ்யங்களை கொண்டுள்ள நிலையில் திடீரென ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் சூழ்ச்சியால் அண்ணன் தம்பிகளுக்கிடையே நடந்த சோகம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

ஜனார்த்தனன் போடும் திட்டம் :

விஜய் டிவியில் கடந்த 3 வருடம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை எடுத்து காட்டும் வகையில் மிகவும் அழகாக இயக்கி வருகிறார் இயக்குனர் சிவா சேகர். சிறிய பெட்டி கடையில் வாழ்க்கையை தொடங்கிய குடும்பம் தற்போது மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் கட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில் அண்ணன் மூர்த்தி இருக்கும் போது சத்தமா கூட பேசாத தம்பி ஜீவா தற்போது குடித்து விட்டு சண்டை போடுவது போல் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசுக்கு பரிந்துரை!

அதாவது கடந்த எபிசோடில் ஜனார்த்தனனிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு தேவை என டாக்டர் கூறியத்தை காரணமாக பயன்படுத்தி ஜனார்த்தனன் ஜீவாவை அழைத்து “மாப்பிள்ளை இனிமே நீங்க தான் நம்ம கடைய பாத்துக்கனும்” என்று சொன்னதற்கு மறுப்பு சொல்ல முடியாமல் ஒப்புக்கொண்டு அவர் கடையை பார்த்து வருகிறார். இதெல்லாம் வேணுமென்று ஜனார்த்தனன் செய்யும் சூழ்ச்சி. ஏனென்றால் ஜனார்தனுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிடிக்காது. மாப்பிள்ளை ஜீவாவை ஏற்றுக் கொண்ட அவர், அவரின் குடும்பத்தை ஏற்க மறுக்கிறார். இப்படி இருக்கையில், ஜீவாவை எப்படியாவது வீட்டோட மாப்பிள்ளை ஆக்கிவிட வேண்டும் என நினைக்கிறார். அதற்காக அவர் பல திட்டங்களை போட்டதில் இதுவும் ஒன்று.

அந்த சமயத்தில தான் ஒரு முறை அண்ணனிடம் நான் நம்ம கடைக்கு வரேன் என்று கேட்போம் என நினைத்து ஜீவாவும் மூர்த்தியிடம் கேட்க அதற்கு மூர்த்தியும் நீ கொஞ்சம் நாளைக்கு அங்க இருந்து கடையை பார்த்துக்கோ என்று மீண்டும் மீண்டும் அதையே சொன்னதால் மனமுடைந்த ஜீவா மொத்த குடும்பமும் தன்னை மறந்து விட்டதாக எண்ணி வருத்தம் கொண்டார். இந்த நேரத்தில் தான், மீனாவின் அப்பாவும் இன்றைய எபிசோடில் ஜீவாவிடம் வீட்டோட மாப்பிள்ளையாக வரும்படி கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜீவா மொத்த கோவத்தையும் குடித்துவிட்டு அண்ணனிடம் காட்டுவது போன்ற காட்சிகள் ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!