அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசுக்கு பரிந்துரை!

0
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை - மாநில அரசுக்கு பரிந்துரை!
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை - மாநில அரசுக்கு பரிந்துரை!
அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை – மாநில அரசுக்கு பரிந்துரை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இந்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை முடித்து, வரும் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிப்பது குறித்து மாநில பள்ளி கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

கோடை விடுமுறை

நாடு முழுவதும் கொரோனா தொற்று ஓய்ந்து வந்ததற்கு பிறகு கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு, தேர்வுகளும் ஆப்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நடப்பு கல்வியாண்டு இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதால் மாநிலங்கள் தோறும் கோடை விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மே 2 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிப்பது குறித்து மாநில பள்ளி கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் இதோ!

இப்போது மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை ஏற்கனவே முடிவு செய்தது போல இந்த கல்வியாண்டுக்கான கோடை விடுமுறை 76 நாட்களாக இருக்கும் என்று அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இந்த மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு, மே மாதத்தில் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதால் இந்த கோடை விடுமுறை குறித்த நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பாடத்திட்டத்தை முடிப்பதில் பின்தங்கிய பள்ளிகளுக்கான கல்வி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில கல்வி ஆணையர் சூரஜ் மந்தாரே தெளிவுபடுத்திய போதிலும், திருத்தப்பட்ட அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் கோடை விடுமுறை குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு, பள்ளிக் கல்வித்துறை கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் அம்மாநிலத்தில் 1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 30 வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 15ம் தேதிக்கு முன்னதாக தேர்வுகளை முடிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here