முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கல் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

0
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கல் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கல் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கல் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தாலும், தொடர்ந்து தடுப்பு பணிகளை கண்காணிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடத்தை விட உயிரிழப்புகளும், தொற்று பரவல் எண்ணிக்கையும் எதிர்பாராத அளவு உயர்ந்தது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிகரித்து வரும் நோய் தொற்றால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தது. இந்த இக்கட்டான நிலையை சமாளிக்க முடியாமல் அரசுகள் திணறின.

ஒற்றை, இரட்டை எண் முறையில் பேருந்துகள் இயக்கம் – அரசுக்கு கோரிக்கை!

இந்த நேரத்தில் தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. ஊரடங்குகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இதன் விளவைவாக தற்போது கொரோனா பரவல் இறங்கு முகத்தில் உள்ளது. இதனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி கொரோனா பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்ளுதல், தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தல், முகக்கவசம் அணிதலை கட்டாயப்படுத்தல், கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை கட்டாயம் மக்கள் பின்பற்ற வேண்டும். தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கண்காணிப்பை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் மீண்டும் ஆபத்து நேர்ந்து விடும். விதிமுறைகளை கடைபிடிப்பதில் பொதுமக்களுக்கு எந்தவித விலக்கும் அரசுகள் அளிக்க கூடாது. மாநில அரசுகளின் தலைமை செயலாளர் அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். என்று குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!