மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளக்கம் ஆதார் கார்டை மொபைல் நம்பர் இல்லாமலும் கூட டவுன்லோட் செய்யலாம். அதற்கான எளிய வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.
ஆதார் கார்டு:
இந்தியாவில் தனி நபரின் அடையாளமாக விளங்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். வங்கி கணக்கு தொடங்கவும், பான் கார்டு பெறவும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை தேவைக்கேற்ப மாற்றி கொள்ள UIDAI அவ்வபோது புதிய வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி ஆதார் கார்டில் புகைப்படம் மாற்றுதல், முகவரி மாற்றுதல், தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளது.
ஆதாரில் விவரங்களை மாற்றுவதற்கு உரிய ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆதார் கார்டை நாம் எப்போதும் கைகளில் வைத்திருக்க ஏதுவாக பிவிசி ஆதார் கார்டு உள்ளது. ஆதார் அட்டை தொலைந்து விட்டால் எளிதாக ஆதார் எண் அல்லது ஆதாரில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண் வசியமாகும் தற்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் இல்லாமல் ஆன்லைனின் பதிவிறக்க முடியும்.
மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட்டை டவுன்லோட் செய்யும் முறைகள்:
- முதலில் https://uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் ‘மை ஆதார்’ என்ற ஆப்ஷனை தேர்தெடுத்து ‘Order Aadhaar PVC Card என்பதை கிளிக் செய்யவும்.
- இப்போது உங்கள் ஆதாரின் 12 இலக்க எண் வழங்கப்படும். அதன் பிறகு captcha குறியீடை உள்ளிட வேண்டும்.
- அடுத்ததாக ‘My Mobile number is not registered’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து புதிய தொலைபேசி எண்ணை பதிவிட்டு ஒடிபி அனுப்ப வேண்டும்.
- ஒடிபி மொபைல் எண்ணுக்கு வந்தவுடன் அதை பதிவிட்டு விவரங்களை சரிபார்த்து SAMIT கொடுக்கவும்.
- Make payment ஆப்ஷன் கிளிக் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும். பிறகு ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
- உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SRN எண் வந்தவுடன் தபாலில் உங்கள் ஆதார் கார்டு வந்து விடும்.