புரோ கபடி தொடரின் 11 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (அக்டோபர் 26 ), பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிராக யு மும்பா அணி மோதியது. இப்போட்டியானது 31-31 என்ற புள்ளிக் கணக்கில், சமநிலையில் முடிந்தது. ஆனாலும், பெங்கால் வாரியர்ஸ் அணி 21 புள்ளிகளுடன் 2வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இதே போன்று மற்றொரு ஆட்டத்தில், தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் டபாங் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில், டபாங் டெல்லி அணியின் கேப்டன் நவீன் குமார் 2 போனஸ் பாயிண்ட்ஸ் உட்பட 15 புள்ளிகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். இதனால், டபாங் டெல்லி அணி 41-37 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



























