இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஆடவர் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்த நிலையில் நியூஸ்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தோல்வியடைந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2 – 0 என்ற கணக்கில் இழந்துள்ளது. இதனால், 12 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை தவற விட்டுள்ளது. முன்னதாக கடந்த 2012ல் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது. இங்கிலாந்துக்கு எதிராக 1 டெஸ்ட் உட்பட இந்த ஆண்டு மட்டும் இந்திய அணி சொந்த மண்ணில் 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது.

























