LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் தங்க நகை ஹால்மார்க் வரை – ஜூன் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

0
LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் தங்க நகை ஹால்மார்க் வரை - ஜூன் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் தங்க நகை ஹால்மார்க் வரை - ஜூன் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் தங்க நகை ஹால்மார்க் வரை – ஜூன் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

ஜூன் மாதம் தொடங்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன, ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அந்த வகையில் ஜூன் 1-ஆம் தேதி முதல் சமையல் சிலிண்டர் விலை முதல் வங்கி சேவை வரை பணம் தொடர்பான அனைத்தும் மாற உள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முக்கிய மாற்றங்கள்:

சிலிண்டர் விலை: LPG சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், சிலிண்டர்களின் விலை ஜூன் 1 முதல் மாறக்கூடும். ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலையானது அதிகரித்து வரும் நிலையில், தற்போது கேஸ் விலையும் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த மாதமும் விலை உயருமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Exams Daily Mobile App Download

நகைகளுக்கு ஹால்மார்க்: இந்தியர்களுக்கு தங்கம் மீது எப்போதுமே ஆர்வம், ஆசை அதிகம். தங்கம் விலை உயர்ந்து கொண்டே சென்றாலும் அதை வாங்குவதற்கு எப்போதும் ஒரு கூட்டம் நகைக் கடைகளில் அலைமோதும். தங்கம் என்பது வெறும் ஆடம்பரப் பொருள் மட்டுமல்ல, அதுவொரு சிறந்த முதலீட்டுக் கருவியாகும்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகளுக்கான தரத்தை உறுதிப்படுத்த இந்திய தர நிர்ணயக் கழகத்தின் (BIS) ஹால்மார்க் முத்திரை உதவுகிறது. இந்த முத்திரையைக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தரத்தை உறுதி செய்யலாம்.

இந்நிலையில் தங்க நகைகளுக்கு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. அதாவது அனைத்து நிலைகளுக்கும் கட்டாயம் ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும். அப்படித்தான் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி, ஜூன் 1 முதல் ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுகிறது. அதன் பிறகு 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் ஆகிய மூன்று தரங்களில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்படும்.

சென்னையில் கிடுகிடுவென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

போஸ்ட் ஆபீஸ் கணக்கு: தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கு புதிதாக இரண்டு முக்கியமான சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, தபால் அலுவலக சேமிப்பு கணக்குதாரர்கள் இனி மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு மின்னணு முறையில் பணம் அனுப்பவும், பணம் பெறவும் முடியும். இந்த நடைமுறை ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

வாகன காப்பீடு: வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ஜூன் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்தபடி இந்த உத்தரவு நடைமுறைபடுத்தப்படுகிறது.

அதாவது 150 சிசி க்கு மேலுள்ள இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு பிரீமியம் 15 சதவீதம் உயர உள்ளது. அதனைப் போலவே 1000 cc முதல் 1500 cc வரை உள்ள கார்களுக்கு பிரீமியம் தொகை 6 சதவீதம் அதிகரிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!