ரஷ்யாவின் வெற்றி தின அணிவகுப்பில் பிரதமர் மோடி.. விழாவில் கலந்து கொள்ள அதிபர் புதின் அழைப்பு..!!
ஜெர்மனியின் நாஜி படையின் தோல்வியில் சோவியத் ஒன்றியத்தின் பங்கை நினைவுகூரும் வகையில் ரஷ்யா வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும், ஜெர்மனியை நிபந்தனையற்ற சரணடைதல் சட்டத்தில் கையெழுத்திட வைத்ததன் மூலம் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரை திறம்பட முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக மே 9, 1945 அன்று முதல் ஆண்டுதோறும் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை.. ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!
அதாவது, “வருகின்ற மே 9,2025 ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெறும் 80 வது ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ வெளியிட்டார்”. மேலும், 2024 ஆம் ஆண்டு அரசு பயணத்தின் போது பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



























