ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை., ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி., வலுக்கும் எதிர்ப்பு!!

0

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடை., ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி., வலுக்கும் எதிர்ப்பு!!

 

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை ரத்து செய்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போது அங்கு பயிலும் மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அங்கு சென்று படிக்கும் சுமார் 6,800 வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!!

இது ஒரு பக்கம் இருக்க, வருடந்தோறும் ஏறத்தாழ 800 வெளிநாட்டு மாணவர்கள் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சேர்கின்றனர். இந்நிலையில் டிரம்ப் அரசின் முடிவு சட்டவிரோதமானது என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், டிரம்ப் சமூக வலைதளம் ஒன்றில், “ஹார்வர்டை இனி கற்றுக்கொள்ள ஒரு நல்ல இடமாகக் கூட கருத முடியாது, மேலும் உலகின் சிறந்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளின் எந்த பட்டியலிலும் கருதக்கூடாது” என்று பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!