SWAYAM ஜனவரி 2025 நுழைவுச்சீட்டு : பதிவிறக்கம் வழிமுறைகள் இதோ உங்களுக்காக… முழு விவரம் உள்ளே..!!
ஸ்வயம் (SWAYAM) என்பது இளம் ஆர்வமுள்ள மனங்களுக்கான செயலில் கற்றல் வலைகளைக் குறிக்கிறது. இது இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு மாசிவ் ஓபன் ஆன்லைன் கோர்ஸ் (MOOC) தளமாகும். இந்த தளம் உயர்கல்வி, உயர்நிலைப் பள்ளி மற்றும் திறன் சார்ந்த படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலைகளை உள்ளடக்கிய ஆன்லைன் படிப்புகளுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. மேலும், 594 பாடப்பிரிவுகள் கொண்ட இந்த படிப்பிற்கான தேர்வானது ஹைபிரிட் முறையில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமை (NTA), SWAYAM 2025 ஆம் ஆண்டுக்கான நுழைவுச் சீட்டை வெளியிட்டுள்ளது.
மேலும், “SWAYAM எழுத்துத் தேர்வு மே 24, 25 மற்றும் 31, 2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான முதல் ஷிப்ட் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் நிகழும் என்றும், இரண்டாவது ஷிப்ட் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் எனவும் மொழித் தாள்கள் அந்தந்த மொழியில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “இத்தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முதலில் exams.nta.ac.in/swayam இணையதளத்திற்கு சென்று முகப்புப் பக்கத்தில் உள்ள SWAYAM ஜனவரி நுழைவுச் சீட்டு 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும். பின்னர் வேட்பாளர்கள் உள்நுழைவு விவரங்களை சமர்ப்பித்தவுடன் உங்கள் நுழைவுச் சீட்டு காண்பிக்கப்படும். அதை சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.



























