மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் பிரசார் பாரதி நிறுவன வேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் பிரசார் பாரதி நிறுவன வேலை வாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

பிரசார் பாரதி நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு காலியிடங்கள் நிரப்ப இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பிரசார் பாரதி:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிரசார் பாரதி நிறுவனத்தின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலகத்திற்கு மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு மாதம் ரூ.35,000/- ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இருந்து எம்பிஏ/எம்பிஏ (மார்க்கெட்டிங்) அல்லது பிஜி டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் முடித்திருக்க வேண்டும்.

மேலும், நேரடி விற்பனையில் குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் அல்லது ஊடக நிறுவனத்தில் நேரடி விற்பனையில் அனுபவம் உள்ள வேட்பாளருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதியின் படி வேட்பாளருக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ தளத்தில் தகுந்த ஆவணங்களோடு சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PRASAR BHARATI OFFICIAL SITE

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!